மக்கள் வளர்வதற்காகக் காடுகள் பெருகட்டும் (in Tamil)

By த.கண்ணன் (Translation by Kannan T); original written in English by Sangeetha SriramonMar. 23, 2015in Environment and Ecology

Original English story written specially for Vikalp Sangam

ஆரோவில் சாதனா வனம்:  வரண்ட நிலத்தில் வளர்க்கப்பட்ட காடுகளும், மக்கள் மேம்படுவதற்கு ஏற்ற சமூகச்சூழலும், ஈகைப் பொருளாதாரமும் அமையப்பெற்ற இடம்

பயணம் இங்கே தொடங்கியது…

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்தும் ஆரோவில் அன்னையிடமிருந்தும் எழுந்த அழைப்பை ஏற்று, தமது ஒரு வயது மகள் ஓஷரோடு (Osher) ஆரோவில்லுக்கு இடம்பெயர்ந்த போது, அவிராம் ரோசினுக்கும் (Aviram Rozin) யோரித் ரோசினுக்கும் (Yorit Rozin) ஒரு விஷயம்தான் தெரிந்திருந்து: சேவையையே வாழ்க்கையாய்க் கொண்டு வாழவேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது என்பதுதான் அது. அவர்கள் செய்ய விழைந்தது என்ன, செய்வது எப்படி, எப்போது, எங்கு என்பதெல்லாம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது சொற்களில் சொல்லவேண்டுமானால், கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் மூலமாக உலகெங்கும் நடந்திருப்பது எல்லாம் முழுமுற்றான சரணாகதியின் விளைவாகத்தான்.

The Rozins
ரோசின்குடும்பம்

அவிராம் இஸ்ேரலில் ஓர் உளவியலாளராக இருந்து, பின்னர் ஒரு வணிக ேமலாண் அதிகரியாக இருந்தார்; யோரித் ஒரு கட்டிடக் கைலஞராக இருந்தார். இருவருக்கும் தங்கள் தனிப்பட்ட விருப்பங்கைள மட்டுேம நிைறேவற்றிக்கொள்கின்ற வைகயில் அைமந்த வாழ்க்ைகமுைற பிடிக்கவில்ைல. இந்தியாவிற்கு ஒருமுைற வந்திருந்தபோது, இந்நாட்டின்மீது காதல்கொண்டு, இஸ்ேரலில் இருந்த அவர்களது எல்லா முைனப்புகைளயும் விட்டுவிலகி, இந்தியாைவ அவர்களது புதிய இல்லமாக்கிக்கொள்ள முடிவுெசய்தனர். இந்தியாவில் சில சமூகங்களில் வாழ்ந்தபிறகு, ரோசின் தம்பதியர் ஆரோவில் அறக்கட்டைள அவர்களுக்கு அளித்த 70 ஏக்கர் பாழ்நிலத்திற்கு வந்தைடந்தனர். இந்நிலம் கடுைமயாக வரண்டிருந்ததாலும், ஆரோவில்லிருந்து விலகியிருந்ததாலும், ேவறு எவரும் விரும்பாத ஒன்றாக இருந்தது. அவிராமும் யோரித்தும் இந்த நிலத்ைத மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அதில் பணிெசய்யத் தொடங்கினர். ஆரம்பத்தில், காடுகள் வளர்த்துக்கொண்டு தற்சார்பாக வாழும் சில குடும்பங்கள் கொண்ட சிறு சமூகமாக உருெவடுப்பைதேய அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், நிலம் அவர்களுக்கு ேவறு திட்டம் ைவத்திருந்தது. நிலம் மிகவும் வரண்டிருந்ததால், அவர்கள் நட்ட எல்லா நாற்றுகளும் இறந்துவிட்டன. ேமலும், அவர்களது வாழ்க்ைகமுைறைய அனுபவித்தறியவும், ேவறு பணிகள் ேதடியும் ெபருமளவில் தன்னார்வலர்கள் வரத்தொடங்கினர். எதிர்பாராத வைகயில் விரிந்த அந்த நிைலைய நயத்தோடு ஏற்றுக்கொண்டு, நீர் பாதுகாப்பும், காடுவளர்ப்பும் ெசய்யும் தன்னார்வலர் சமூகமாக அது உருெவடுப்பைத அவர்கள் கண்டனர். இதற்குமுன்னர் இைவயிரண்டிலும் எந்தப் முன்னனுபவமும் ெபற்றிராத ரோசின் தம்பதியினர், பணி மூலமாகேவ கற்றுக்கொள்ளத் தொடங்கினர்: A-சட்டங்கைளப் பயன்படுத்தவும், மைழநீர் ேதக்க ஏரிகளும் குளங்களும் அைமக்கவும், மரம்நடுதல், நீர் பாதுகாப்பு, சூழல்சார் கட்டிடங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மக்கும் கழிவுகள், சமூக வழிமுைறகள், சமூகச் சைமயல் போன்ற பல தளங்களில் புதுைமயான சோதைனகள் ெசய்யவும் கற்றுக்கொண்டனர்.

Afforestation is an important everyday activity at Sadhana
காடுவளர்த்தல்சாதனாவனத்திலுள்ளமுக்கியமானஅன்றாடப்பணியாகஉள்ளது
Volunteer Community
தன்னார்வலர்சமூகம்
சாதனா வனம் என்பது என்ன…

சாதனா வனத்திற்கு ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து ெசன்றுகொண்டிருப்பவள் என்கிற முைறயில், ெவளிப்பைடயாகத் ெதன்படும் உலகச் சிக்கல்களுக்கு எதிர்விைனயாக இச்சமூகம் என்ன ெசய்கிறது என்று எளிதாக ஒரு நீண்ட பட்டியலிடமுடியும்: மின் கட்டைமப்புக்குப் புறத்ேத இருத்தல், சூரிய மற்றும் மனிதசக்தியில் உருவாகும் மின்சக்திையப் பயன்படுத்துதல், இயற்ைகக் கட்டிடங்கள், மக்கும் கழிவைறகள், நீர் அறுவைட, நீர் பாதுகாப்பு, காடுவளர்த்தல், நனிைசவம் (தாவர உணவுப் பழக்கம்), கழிவின்ைம, நிைலகொள் ேவளாண்ைம (ெபர்மாகல்ச்சர்) என்று அடுக்கிச்ெசல்லலாம். ஒரு தளத்தில், இைவதாம் சாதனா வனத்ைத வைரயறுப்பதாகக் கொள்ளலாம். இன்னொரு தளத்தில், இைவ ெவறும் தகவல்களாகிவிடுகின்றன. சாதனா வனத்தின் அனுபவத்ைத நாடி வருபவர்க்கு முக்கியமாகத் ெதரிவது அதில் உள்ளடங்கிய ஆன்மசக்தியும், அதன் வாழ்க்ைகயிலும் பணிகளிலும் உள்ள பிற நுட்பமான கூறுகளும்தாம். ஒரு வைகயில், தம்ைம இந்தியர் என்று அைழத்துக்கொள்ளும் பலைரயும் விட, ரோசின் குடும்பத்தினர் அதிகமான இந்தியத்தன்ைம கொண்டவர்கள். உண்ைமயில், அவர்கைள இந்தியாவுக்கு ஈர்த்து இைதேய தம் இல்லமாக்கிக் கொள்ளச் ெசய்தது, ஒருைமக்கு உருக்கொடுக்கும் இந்நாட்டின் பண்பாடுதான்; இன்று பல்ேவறு விைசகளுக்கு நாம் இழந்துவிட்ட பண்பாடு; மீள்பிறப்பு கொடுக்கப்படேவண்டும் என்று அரவிந்தர் அைழப்புவிடுத்த பண்பாடு. இதோ, சாதனா வனம் உறுதியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றும், சில விழுமியங்கள்:

* கொைட

சாதனா வனத்திைன பொறுத்தவைர, ஒருவரிடம் பணம் உள்ளதா இல்ைலயா என்பது ேமலுமொரு ெவற்றுத்தகவல்தான்; சமூகம் அவருக்கு என்ன அளிக்கமுடியும் என்பதற்கும் அதற்கும் தொடர்ேப இல்ைல. நம் சமுதாயத்ைத உள்ளடக்கிய முதலாளித்துவ அைமப்பு, வாழ்க்ைகக்கு அத்தியாவசியமான எல்லாவற்ைறயும் – நல்ல உணவு, சுத்தமான குடிநீர், அன்பு, அறிவு போன்றவற்ைற- விற்பைனெசய்து சுரண்டக்கூடிய நுகர்பொருட்களாக மாற்றுவதிேலேய ஆதாயம் காண்கிறது. அவ்வாறில்லாமல், ரோசின் குடும்பம் இைவ விைலயின்றிக் குைறவின்றி மிகுந்துகிைடக்கேவண்டும் என்று நம்புகிறார்கள். தாகூர் கனவு கண்ட, ‘எங்ேக அறிவுக்கு விைலயும் தைளயும் இல்ைலயோ’, அத்தைகய ஓர் இடம் சாதனா வனம். இங்ேக ஒருங்கிைணக்கப்படும் எல்லா பட்டைறகளும் அன்பளிப்பாகேவ வழங்கப்படுகின்றன. கூட்டுறவு விைளயாட்டு குறித்த அைரநாள் பயிற்சி, காடுவளர்த்தலும் நீர்பாதுக்காப்பும் குறித்த இரண்டுநாள் பட்டைற, சமூகநலத் தொழில்முைனதல் பற்றிய ஒரு வாரப் பட்டைற, நிைலகொள் ேவளாண்ைம பற்றிய இரண்டு மாதப் பயிற்சி என்று எல்லாேம இம்முைறயிேலேய அளிக்கப்படுகின்றன.

Water Conservation Workshop by Aviram
அவிராம் நடத்தும் நீர்பாதுகாப்புப் பட்டைற

அவிராமின் சொற்களில், “ ‘ைகமாறாக எனக்கு என்ன கிைடக்கும்’ என்கிற வில்ைலயின் மூலமாக எல்லாவற்ைறயும் பார்த்தால், இல்லாைம என்கிற சுழலுக்குள் நிரந்தரமாகச் சிக்கிவிடுகிறோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்துப் பழகும்போது, அதுதரும் மிகுதிைய அனுபவிப்பவர்கள் இன்னும் அதிகமான மக்களோடு பகிர்ந்துகொள்வார்கள்; வாழ்வின் நீரோட்டத்ைதயும் வாழ்க்ைக மீதான நம்பிக்ைகையயும் மீட்ெடடுப்பார்கள். இைத ஈைகப் பொருளாதாரம் அல்லது இன்பமிகு பொருளாதாரம் என்று அைழக்கிறோம்.”

Thatched Structures
ஓைலக் குடில்கள்

மிகுதியாய் இத்தைன இருப்பதற்கும், கொைடயாய் இவ்வளவு வழங்கப்படுவதற்கும், ேதைவயான நிதி எங்கிருந்து வருகிறது?

உலெகங்கும் இருந்து வரும் கொைட மூலமாகேவ சாதனா வனம் நிதி திரட்டிக்கொள்கிறது. சிறிதோ ெபரிதோ, எல்லா அன்பளிப்புகளும் போற்றிேயற்றுக்கொள்ளப்படுகின்றன. சமூகம் நடத்தும் சில திட்டப்பணிகளால் ேமலும் நிதி ேசர்க்கப்படுகிறது. ‘ஆனால், ஏன் சாதனா வனம் எைதேயனும் விற்பைன ெசய்யக்கூடாது – பயிற்சி வகுப்புகளோ, விறகோ, காய்கறிகளோ எைதேயனும் விற்கலாேம?’ என்பது அடிக்கடி சுமத்தப்படும் விமர்சனம். சாதனா வனம் பின்பற்றும் ஈைகப் பொருளாதாரத்ைதப் பல மக்களாலும் புரிந்து கொள்ளமுடிவதில்ைல. அது ெவகுளித்தனமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

“ஈைகப் பொருளாதாரத்தின் பாைத சீரானதன்று. நம் பணிகைளத் தொடர எப்படியாவது நமக்குத் ேதைவயானது கிைடக்கும் என்கிற அைசக்கமுடியாத நம்பிக்ைக அதற்கு ேவண்டும். சில சமயங்களில், கைடசி நொடிவைர நம் நம்பிக்ைகக்குச் சோதைன வரும். நம் கருவூலம் காலியாகும்போது, நம் நம்பிக்ைகைய வலுவாகப்பற்றிக்கொண்டு நிற்கமுடியுமா என்று நாம் சோதிக்கப்படுவோம். நாம் வீழப்போகிறோமோ என்று ஒரு கணம் தோன்றத்தொடங்கும்போது, எதிர்பாராத இடங்களில் இருந்து, எதிர்பாராத வழிகளில் உதவி வந்துேசரும். மறுபடி மறுபடி இது நிகழ்ந்திருக்கிறது! உதவி வந்தைடயுமா என்கிற ஐயேம எழாத ஒரு வலிைமதான் இத்தைகய ெசயல்பாட்டிற்கு அவசியம். இது எளிைமயானதுதான், ஆனால் சுலபமானதல்ல. இது ஒரு வைகத் தவம்,” என்று, அடிக்கடி ேகட்கப்படும் இந்தக் ேகள்விக்கு விைடயளிக்கிறார், அவிராம், ஒவ்வொரு முைறயும் அதிக திடத்துடன்.

முன்னொரு காலத்தில், இந்தியாவில் சத்திரங்கள் அதிகம் காணப்பட்டன, குறிப்பாக புனிதயாத்திைர ேமற்கொள்ளப்படும் சாைலகளில். இந்தச் சத்திரங்களில், நாள் முழுவதும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அங்கு தங்கியிருந்த காலங்களில் நோயுற்றவர்களும், இறக்க ேநர்ந்தவர்கைளச் சார்ந்திருந்தவர்களும் கவனித்துக்கொள்ளப்பட்டனர். இத்தைகய தானத்ைதயும் ஈைகையயும் மீட்கும் முயற்சியாகேவ பல சமயங்களில் சாதனா வனம் எனக்குத் ெதன்படுகிறது.

* யாவரும் ேகளிர்

சாதனா வனம் உலகத்ைத ஒற்ைறக் குடும்பமாகப் பார்க்கிறது. ைகவிடப்பட்ட ஒரு தாயும் ேசயும், குடும்பத்தால் தள்ளிைவக்கப்பட்ட ஒரு தம்பதியினர், மனநிைல பிறழ்ந்த ஒரு ெபண் – இங்கு மட்டுேம பாதுகாப்பாகவும் இல்லத்தில் இருப்பதாகவும் உணர்ந்தவர் – என்று பலரும் சாதனா வனத்தில் கவனித்துக்கொள்ளப்படுவைத நான் ேநரடியாகக் கண்டிருக்கிேறன். தம் வாழ்க்ைகைய மாற்றுவழிகளில் வாழவிரும்பி, ஊக்கமும் திைசயும் ஆதரவும் ேதடிவரும் பல இைளஞர்களுக்குப் புகலிடமாக சாதனா வனம் மாறிவருகிறது. இவர்களில் பலர், ெபங்களுர் போன்ற நகரங்களிலிருந்து தம் சலிப்பான ஓட்டத்திலிருந்து ஓய்ெவடுத்துக்கொள்ள வரும் தகவல்தொழில்நுட்ப வல்லுனர்கள். ைககளால் உடலுைழப்பு ெசய்து, இப்பூமியில் ேதைவகைளக்குைறத்துச் சுைமதராது வாழப்பழகி, மக்கள் ஒருவருக்கொருவர் உண்ைமயாக இருக்கும் சமூக வாழ்க்ைகைய அனுபவிக்க இங்ேக வருகிறார்கள்.

Packed hall every Friday night at the Eco-Film Screening, followed by a free vegan dinner for all
ஒவ்வொரு ெவள்ளியன்றும் திைரயிடப்படும் சூழியல் படத்திற்கு நிைறந்துள்ள அரங்கு; தொடரவிருப்பது தாவர உணவு விருந்து.

காவலாட்களும் சமூகத்தின் அங்கத்தினராகக் கொண்டுள்ள ெவகுசில இடங்களில் சாதனா வனமும் ஒன்று. உள்ளூர் கிராமத்தினர் சுதந்திரமாக உள்ேள வந்து, அவர்கள் ேவண்டுமளவிற்கு, சமூக வாழ்வின் எல்லா பகுதிகளிலும் பங்ேகற்கலாம். மனித ஒற்றுைம இங்ேக வாழப்படும் ஒரு விழுமியமாகத் திகழ்கிறது.

ரோசின் குடும்பத்தினர் இந்த சிந்தைனகைள இந்தியாைவக் கடந்தும் நீட்டித்துள்ளனர் – பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ைஹதி (2010), பழங்குடியினர் வாழும் வட ெகன்யா (2014) ஆகிய இடங்களில் தைழத்துவரும் இரண்டு சாதனா வனச் சமூகங்கள் உள்ளன. உணவுக் காடுகைள ஏற்படுத்தி, உள்ளூர் மக்களுக்கு நீண்ட கால உணவுப் பாதுகாப்ைப உருவாக்குவதுதான் இந்த இரண்டு இடங்களிலும் ஆற்றப்படும் ேசைவயின் முக்கிய குறிக்கோள்.

* ேசைவ

ேவைல என்பது ஒரு பளுவாகக் கருதப்பட்டு, இயந்திரங்களுக்கோ கீழ்சாதி மக்களுக்கோ புறந்தள்ளப்படேவண்டிய ஒன்றாகிவிட்ட இன்ைறய உலகில், இவ்விரு வழிமுைறகைளயும் பின்பற்றாமலிருப்பது மட்டுமன்றி, இைத ‘ேசைவ’ என்று அைழக்கும் ஒரு சமூகத்ைதக் காண்பது அரிது. சைமயல் முதல் தோட்டேவைல, கழிவைறகைளத் தூய்ைமப்படுத்துதல் வைர, எல்லாப் பணிகளும் சமூகத்தில் உைறயும் எல்லாராலும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. ‘இரண்டாவது ேசைவக்கான ேநரம் ஆகிவிட்டது,’ என்று அடிக்கடி ஏதாவது ஒரு தன்னார்வலர் கூவிச்சொல்வைத இங்கு காணலாம். சாதனா வனத்தின் சொல்வழக்கில் இது ஆழமாகப் பதிந்துவிட்டது.

Weekly Community Meeting for sharing and planning
பகிர்ந்துகொள்வதற்கும் திட்டமிடுதலுக்குமான வாரந்திர சமூகக்கூட்டம்
* அகிம்ைச

ச ா த ன ா வ ன த் தி ல் மி க ெ ந ரு க் க ம ா ன த ா க உ ண ர ப் ப டு ம் ஒ ரு வி ழு மி ய ம் , அ கி ம் ை ச . “விலங்குகளிலிருந்து நமக்கு கிைடக்கும் பொருள்களுக்காக, பால் உள்பட, அைவ தொடர்ந்து மோசமாக நடத்தப்படுகின்றன. விலங்கிலிருந்து வரும் எந்தப் பொருைளயும் பயன்படுத்தாமலிருப்பது, விலங்குகள் மீது நாம் பரிவுகாட்டும் ஒரு வழி. பாலுக்காகவும் கறிக்காகவும் இயங்கும் கால்நைடவளர்ப்புத் தொழிலின் விைளவாக, நாம் விலங்குகளுக்கு வழங்கும் அதிகமான உணைவ மக்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தினால், உலகின் உணவு நிைலயும் காடுகளின் நிைலயும் ெபரிதும் ஏற்றம் காணும்,” என்கிறார்கள் ரோசின் தம்பதியர்.

* கல்வி

யோரித் அவிராம் தம்பதியின் இரண்டாவது மகளான, ஏழு வயது ஷாேலவ் (Shalev) இதுவைர பள்ளிக்குச் ெசன்றேதயில்ைல. 14 வயது ஓஷர் இவ்வாண்டுதான் பள்ளி ெசல்வதற்கு முடிவுெசய்துள்ளாள். பல தைலமுைறகள் இைணந்து வாழும் ஒரு ேநர்ைமயான சமூகத்தில் அதன் அங்கத்தினர்கள் அவரவர் தனிப்பட்ட ஆர்வங்களில் ஆழமாக ஈடுபடுவர்; வாழ்க்ைகத் திறன்களிலும் கைலகளிலும் அச்சமூகம் ெசழித்திருக்கும்; புறச்சூழலும் அகச்சூழலும் பாதுகாப்பானதாக இருக்கும்; வைகப்படுத்தப்படாத ேநரம் கட்டற்றுக் கிைடக்கும்; ெபரியவர்கள் ெசய்யும் ெபரும்பாலான பணிகளில் குழந்ைதகள் பங்ேகற்க வரேவற்கப்படுவர். இத்தைகய ஒரு சமூகத்தில் குழந்ைதகள் தமக்குத் ேதைவயானைதத் தாமாகக் கற்றுக்கொள்வதற்கான சூழல் உருவாகும் என்பைத ரோசின் தம்பதியினர் ெசயல்முைறப்படுத்திக் காண்பித்துள்ளனர். குழந்ைதகளின் உள்ளார்ந்த அறிவின் பல கூறுகைள ஊட்டமளித்து வளர்க்கவும், அவற்ைற ெவளிப்படுத்துவதற்கான மிகுதியான வாய்ப்புகைள நல்கவும் நவீனச் சூழல் தவறிவிட்டது; குழந்ைதகள் அத்தைகய வாய்ப்புகைள இங்ேக கண்டைடகின்றனர். ஓஷர் 10 வயதாக இருந்தபோேத, நூற்றுக்கும் ேமற்பட்டவர்களுக்குச் சுைவயான ஆரோக்கியமான உணைவச் சைமக்கத் ெதரிந்திருந்தாள்; ெபரியவர்களுக்கும், குழந்ைதகளுக்கும் கூட்டுறவு விைளயாட்டுகள் குறித்த பட்டைறகைள நடத்தக்கூடியவளாக இருந்தாள்; முரண்கைளக் கைளயும் ெசயல்முைறகளில் அவளால் பங்ெகடுக்க முடிந்திருந்தது. பைழய உலகம் இவற்றில் சிலவற்ைற எந்த மதிப்புமற்றைவயாகக் கருதலாம்; ஆனால், புதிய உலகில் ெசழிக்க இைவயாவுேம அவர்கள் கொண்டிருக்கவும் கூர்படுத்ததவும் ேவண்டியுள்ள மிக முக்கியமான திறன்கள்; எனேவ, அந்த வயதிற்கு இது ஒரு அசாதாரணமான சாதைனதான்; ெவளியிலிருந்து உந்தாமலும் ஊக்குவிப்பளிக்காமலும் இயற்ைகயாக நிகழ்ந்த ஒரு சாதைன.

Children make their own boat
குழந்ைதகள் படகுகைளத் தாேம ெசய்கின்றனர்

எல்லா மகத்தான ஆன்மீகத் தைலவர்களும் குழந்ைதகளின் கல்வி குறித்தும், கல்வியாளர்களின் பணிகுறித்தும் ஒன்ைறக் கூறியுள்ளனர்: ‘நீங்கள் ெபற்றோராகவோ, ஆசிரியராகவோ இருந்தால், உங்கைளச் ெசழுைமப்படுத்துவதற்கு உைழத்துக்கொண்ேட இருங்கள். உங்கள் குழந்ைதக்கோ மாணவருக்கோ நீங்கள் அளிக்கக்கூடிய மிகச்சிறந்த பாடம் அதுதான்.’ குழந்ைதகள் இங்ேக அைமதியாகவோ அன்பாகவோ இருப்பதற்கு அறிவுறுத்தப்படுவதில்ைல. இங்கு சூழ்ந்திருக்கும் அைமதிையயும் அன்ைபயும் அவர்கள் உள்வாங்கிக்கொள்கின்றனர். “‘சாதனா வனம்’ என்று எங்கைள அைழத்துக்கொள்வதற்கான முதன்ைமயான காரணேம, முழுைமைய நோக்கிய பயிற்சிக்கு (‘சாதனா’) எங்கைள ஒப்பைடத்துவிட்ட சமூகமாக நாங்கள் இருப்பதால்தான்,” என்கின்றனர் ரோசின் தம்பதியர்.

சாதனா வனத்தின் முக்கியமான ஒரு ெசயல்திட்டம், 2.7 ஏக்கரில் அைமந்துள்ள ‘குழந்ைதகள் நிலம்’; இது முழுவதுமாக உள்ளூர் கிராமக் குழந்ைதகள், ெபரியவர்கள் உதவியோடு, வடிவைமத்து, திட்டமிட்டு, உருவாக்கியது; மரங்கள், சிறு தோட்டம், மக்கும் கழிப்பைற, மீள்சுழற்சி நிைலயம், சைமயலைற, ெசயல்பாட்டு ைமயம் போன்றைவ இங்குள்ளன. வாரத்தில் 4 நாட்கள், அண்ைட கிராமங்களிலிருந்து குழந்ைதகள் அைரநாள் இங்கிருந்திட வரவைழக்கப்படுகின்றனர். நிகழ்வுகைள ஒருங்கிைணக்கும் தன்னார்வலர்கள் குழந்ைதகளிடம் அவர்களுக்குப் பிடித்த ெசயல்கைளப் பற்றிக் ேகட்டறிந்து, அந்த நடவடிக்ைககைளக் குழந்ைதகளோடு ேசர்ந்து உருவாக்குகின்றனர். தன்னார்வலர்கள் தாம் ஈடுபடவுள்ள நடவடிக்ைககைள – தோட்டத்துக்கு நீர்பாய்ச்சுதல், வரப்பு கட்டுதல் போன்றவற்ைற – அறிவித்துவிட்டு, விருப்பமுள்ள குழந்ைதகளுக்கு அவற்றில் கலந்துகொள்ள வரேவற்புவிடுப்பார்கள். அருகிலுள்ள குளத்தில் நீச்சலடிக்கவும் குழந்ைதகளுக்குச் சுதந்திரமுண்டு; மரத்தின்மீது வீடு கட்டுதல் போன்ற ெசயல்பாடுகைளத் தாமாக முன்ைவக்கவும் ெசய்யலாம்; இைவயாவும் ஓர் இயல்பான கல்வி அனுபவத்திற்கிைடயில் நைடெபறும்.

இந்தியாவில் இருந்த பதினோறு ஆண்டுகளில்:

  • ஆயிரம் தன்னார்வலர்கள் எங்களோடு ஒவ்வொரு ஆண்டும் ேசைவ புரிந்துள்ளனர்
  • 170 மரவைககள் இந்த ெவப்ப மண்டல பசுைம மாறாக் காட்டிைன உருவாக்கியுள்ளன; அவற்றில் ெபரும்பாலானைவ உணவு தருபைவ
  • இந்தியா, ைஹதி, ெகன்யா ஆகிய நாடுகளில், மொத்தமாக: 121,000 மரங்கள் நடப்பட்டுள்ளன
  • நாங்கள் நடும் மரங்களில் 80% ேமலாக தைழக்கின்றன (மிகவும் அதிகமான விழுக்காடு இது)
  • 21,500 மக்கள் நிைலகொள் ேவளாண்ைமயில் எங்கள் அணியினரிடம் பயிற்சிெபற்றுள்ளனர்
  • பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏேதனும் ஒரு சாதனா வனத்திற்கு வந்துள்ளனர்
  • 9000க்கும் ேமற்பட்ட தன்னார்வலர்கள் சாதனா வனச் சமூகங்களில் இரு வாரங்கள் முதல் ஆறு வருடங்கள் வைர தங்கியுள்ளனர்.

இனி என்ன சாத்தியமாகலாம்…

ரோசின் குடும்பத்தினர்க்கு சாதனா வனத்திற்கான கனவுகள் இன்னும் உள்ளன. “கறிக்காகக் கொல்லப்படவிருக்கும் கால்நைடகைள மீட்டுப் பராமரிக்க ஒரு கோசாைல அைமக்கும் கனவு ஒன்றுள்ளது; இைதச் ெசய்ய விரும்புவது, அைவ நமக்கு ஏேதனும் பயன் தரும் என்பதாலன்றி, அவற்றிற்கும் ஒரு நல்ல வாழ்க்ைக வாழும் தகுதி உள்ளது என்பதால்தான்; தன்னலமற்ற ேசைவயின் மூலமாக நாம் வளர்வதற்கான வாய்ப்ைபயும் அைவ உருவாக்கித் தருகின்றன. அனாைத விடுதிகைள விட்டு ெவளிவரும் இைளஞர்கைள எங்களோடு ேசர்த்துக்கொண்டு, வழிநடத்தி, ெவளி உலகில் திறன்வாய்ந்த, தன்னம்பிக்ைககொண்டவர்களாக ெசயல்படத் தயாராக்கவும் கனவு காண்கிறோம். இன்னும் நிைறய இந்தியக் குடும்பங்கள் இைதத் தங்கள் இல்லமாக்கிக் கொள்வார்கள் என்றும் கனவு காண்கிறோம். கர்ம யோகத்தில் திைளத்திருக்கும் சாதுக்கள், காட்டில் உைறந்தவண்ணம் தங்கள் நம்பிக்ைககைளப் பின்பற்றுவதற்கு வரேவற்று அவர்கைளத் தங்கைவக்கவும் கனவு காண்கிறோம். மீளா நோயுற்ற குழந்ைதகைள வரேவற்று, அவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வாழ்க்ைகைய ஏற்படுத்தித்தரவும் கனவு காண்கிறோம். இந்தியா முழுவதும் ஒரு நீர் யாத்திைரைய ேமற்கொண்டு, நாட்டின் உலர்நிலங்களில் நீர் அறுவைட, நீர் பாதுகாப்பு முைறகைள ெசயல்படுத்தவும் கனவு காண்கிறோம்.”

ஒவ்வொரு முைற நான் அவிராைமச் சந்திக்கும்போதும், அவருைடய நீண்ட விருப்பப்பட்டியலில் ேமலும் சிலவற்ைறச் ேசர்த்துக்கொள்கிறார். “ஆனால், இந்தச் சிந்தைனகள் எல்லாேம பொறுப்ேபற்றுச் ெசயல்படுத்தச் சரியான நபர்கைளயும் போதுமான நிதிையயும் கோருவன. சரியான காலம் கூடும்போது இைவ கண்டிப்பாக நடந்ேதறும்,” என்கிறார்.


சாதனா வனம் தொடங்கப்பட்டபோது, அதன் நோக்கம் ‘காடு வளர்ப்போம்’ என்பதாக இருந்தது. ஆனால், சுவிஸ் தன்னார்வலர் ஒருவர், “மக்கள் வளர்வதற்காக, காடுகள் ெபருகட்டும்,” என்றார்; யாவும் சரியாய்க் குவிந்தன. அன்றுமுதல், இந்த வரிேய சாதனா வனத்தின் இலக்குவாசகம் ஆனது.

“மாற்றம் சாத்தியம்!” என்பேத சாதனா வனம் உலகுக்குச் சொல்லும் முக்கியச் ெசய்தி என்கின்றனர் ரோசின் தம்பதியர். நம் மண்ணுக்கும், ஆன்மாவுக்கும், சமூகத்துக்கும் இன்ைறய ஆதிக்க அைமப்பினால் ஆற்றப்படும் ேசதத்ைத உணர்ந்து விழித்துக்கொள்ளும் பல நல்லுள்ளங்கள் எங்கும் உள்ளனர். பல ேநரங்களில், நமக்கு மைலப்பாக இருக்கும்; உலைக மாற்றியைமக்க எங்ேக தொடங்குவது என்ேற ெதரியாமல் தவிப்போம்: நம்முள் ஆழமாகப் பதிந்துவிட்ட பழக்கங்கைளயும் வசதிகைளயும் மாற்றுவதில் தொடங்கி, அைமப்பிைன எதிர்த்துக் கூட்டாக நிற்பது வைர. சாதனா வனத்தில் குைறந்தபட்ச வசதிகளோடும், கடும் உடலுைழப்போடும், விலங்குசார் பொருட்களும் மது, புைகயிைல, காஃைபன் போன்ற அடிைமப்படுத்தும் பொருட்களும் உட்கொள்ளாமல் இருப்பதற்குப் பழகிக்கொள்ளும் போதும், திடீெரன்று தனிப்பட்ட அதிகாரம்ெபற்ற ஓர் உணர்வு எழும். ஒரு மாறுபட்ட உலகின் அனுபவத்ைத அைடயும்போது – பணிேய ேசைவயாக உள்ள, போட்டியோ வணிகப் பரிமாற்றமோ இல்லாத, எல்லாரும் சமமாக நடத்தப்படுகின்ற, எந்ேநரமும் கட்டைளயிடப்படாமேல குழந்ைதகள் துளிர்விடுகின்ற ஓர் உலகில் இருந்துவிட்டுச் ெசல்லும்போது இந்த வைகயான வாழ்க்ைகையப்பற்றியும் இருப்ைபப்பற்றியும் ‘இதுேவ சரி’ என்னும் உணர்வோடு ெசல்கின்றனர்; இன்னொரு உலகம் நிச்சயம் சாத்தியப்படும் என்னும் நம்பிக்ைகயோடு ெசல்கின்றனர். அவர்களுைடய உள்ளுணர்வுக்குச் ெசவிசாய்த்து, புதியதோர் உலகம் பைடத்திடும் ேதடலில் இறங்கும் வலிைமைய இது அவர்களுக்கு வழங்குகிறது. “ெவவ்ேவறு திைசகளில், அவரவர்கான அைழப்புகைள ஏற்றுச் ெசன்றுவிட்ட இந்த இைளஞர்கள் எல்லார் மூலமாகவும் சாதனா வனம் வளர்கிறது.”

ஆசிரியைரத் தொடர்புகொள்ள.

சாதனா வனம் பற்றிய சிறப்புக் கட்டுைர: Auroville Today

Sadhana Forest website

Read original story, More Forests to Grow People, in English

When we practice giving without expectation, those who experience the abundance will share it with more people, restoring the flow of life …

Story Tags: , , , , , , , , , , , ,

Leave a Reply

Loading...